பதவி விலகிய ஸ்பானிஷ் கால்பந்து சங்க தலைவர்
25 ஆவணி 2023 வெள்ளி 09:36 | பார்வைகள் : 3243
ஸ்பெயின் பெண்கள் கால்பந்து அணி உலகக் கிண்ணம் வென்றது.
இந்நிலையில், வீராங்கனை ஒருவருக்கு உதட்டில் முத்தம் வைத்த விவகாரத்தில் கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.
ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் போது அவர் ஸ்பெயின் நட்சத்திரமான ஜென்னி ஹெர்மோசோவின் உதடுகளில் முத்தமிட்டார்.
இந்த விவகாரத்தில் தமது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்திருந்த ஹெர்மோசோ, சங்கத்தின் தலைவரின் இந்த செயல் ஏற்க முடியாது என்பது மட்டுமின்றி, தண்டனைக்குரியது என்றார்.
அந்த முத்த விவகாரம் சமூக ஊடகத்தில் தீயாக பரவியது. மட்டுமின்றி, லூயிஸ் ரூபியேல்ஸ் மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தது.
ஸ்பெயினின் பிரதமர் சான்செஸ்
மட்டுமின்றி, ஸ்பெயினின் பிரதமர் சான்செஸ் ரூபியேல்ஸின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு செவ்வாயன்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், எந்த விளக்கமும் ஏற்றுக்கொள்வதாக இல்லை எனவும் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றார்.
இந்த நிலையில், தாமே முன்வந்து அவர் பதவி விலக இருப்பதாக லூயிஸ் ரூபியேல்ஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.