குள்ள நரியும் சிங்க ராஜாவும்
6 ஆனி 2024 வியாழன் 10:20 | பார்வைகள் : 840
காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த சிங்கம் ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்துல இருந்த குளத்துக்கு போச்சு
அந்த குளத்துல தண்ணீர் கொஞ்சமா இருந்ததால கரையோரத்துல நிறைய செகதியா இருந்துச்சு.
தாகம் அதிகமா இருந்ததால அந்த செகதிய பொருட்படுத்தாம தண்ணி குடிக்க இறங்குச்சு அந்த சிங்கம்
மெதுவா தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கும்போது அதோட காலு அந்த செகதியில மாட்டிக்கிச்சு
அடடா அவசரப்பட்டு ஆபத்துல சிக்கிக்கிட்டோமே இப்ப என்ன பண்ணுறதுனு யோசிச்சுச்சு
தன்னோட பலம் எல்லாத்தையும் உபயோகிச்சு அந்த செகதியில இருந்து வெளிய வர முயற்சி பண்ணுச்சு
எவ்வளவு முயற்சி பண்ணியும் அதால வெளிய வரமுடியல ,உடனே அந்த சிங்கம் யாராவது வந்து நம்மள உதவுனாதான் இந்த செகதில இருந்து வெளியேவர முடியும் நாம யாரையாவது உதவிக்கு அழைப்போம்னு
சத்தமா யாராவது காப்பாத்துங்க காப்பாத்துங்கனு கத்துச்சு
அக்கம் பக்கதுல யாருமே இல்லாததுனால அதோட சத்தம் யாருக்குமே கேக்கல
செகதியில அகப்பட்ட அந்த சிங்கம் உதவி ஏதும் கிடைக்காததால அந்த குளத்துலயே இருக்க வேண்டியதா போச்சு
சில தினங்கள் இப்படியே இருந்துச்சு அந்த சிங்கம். செகதியில மாட்டிகிட்டதால உணவு ஏதும் இல்லாத அந்த சிங்கம் ரொம்ப சோர்ந்து போச்சு
அதனால உதவிக்கு யாரையும் கூப்பிடகூட முடியல
இப்படி இருக்கிறப்ப ஒருநாள் அந்த பக்கமா ஒரு குள்ளநரி வந்துச்சு
அடடா யாரது குளத்தங்கரையில மாட்டிகிட்டு படுத்திருக்குறதுனு பாத்துச்சு
அட சிங்கராஜா இப்படி மாட்டிகிட்டு கிடக்குறாரேன்னு வேகமா ஓடிவந்த அந்த குள்ளநரி சிங்கத்த காப்பாத்த முயற்சி பண்ணுச்சு
கமெதுவா செகதிய தன்னோட காலால நகர்த்தி சிங்கத்த காப்பாத்த பாத்துச்சு
செகதி ரொம்ப கடினமா இருந்ததால அந்த குள்ளநரியால நிறைய செகதிய நகர்த்த முடியல
சிங்க ராஜா சிங்கராஜா நான் உங்கள பின்னாடி இருந்து இழுக்குறேன் நீங்களும் உங்க பலத்த உபயோகிச்சு எப்படியாவது வெளிய வாங்கனு சொல்லிட்டு சிங்கத்த பிடிச்சு இழுத்துச்சு
சிங்கமும் தன்னோட முழு பலத்த பயன்படுத்தி சேத்துல இருந்து வெளிய வர முயற்சி பண்ணுச்சு
சிங்கதோட பலமும் நரியோட பலமும் சேர்ந்து முயற்சி பன்னதுனால ஒரு வழியா சிங்கம் அந்த செகதியில இருந்து வெளிய வந்துடுச்சு
தன்ன காப்பாத்துன நரிக்கு நன்றி சொல்லி இனிமே நாம நல்ல நண்பர்களை இருப்போம்னு சொல்லுச்சு
புது நட்பு கிடைச்சதுனு சந்தோசப்பட்ட அந்த குள்ளநரி தன்னோட குடும்பத்த சிங்கத்தோட குடும்பத்துக்கு அறிமுக படுத்தி வச்சது
ரொம்ப நண்பர்களா மாறிப்போன அந்த சிங்கமும் குள்ளநரியும் எங்க போனாலும் இணைபிரியாம வாழ்ந்து வந்ததுங்க .
இப்படி இருந்தப்ப ஒருநாள் அந்த குள்ளநரியோட மனைவி ,குள்ளநரிகிட்ட உங்க நண்பரான சிங்கத்துக்கு உங்கள புடிக்கல போல
காட்ட ஆள்ற சிங்கம்கூட வாழுறது தப்பு அதனால உங்கள இந்த இடத்தை விட்டு போகச்சொல்லி சிங்கத்தோட மனைவி எங்கிட்ட சொன்னாங்க அதனால நாம இப்போ இந்த இடத்தை விட்டு போகணும்னு சொல்லுச்சு
இதைக்கேட்ட அந்த குள்ளநரி யோசிச்சுச்சு யார் எது சொன்னாலும் தீர விசாரிக்குற பழக்கம் உடைய அந்த குள்ளநரி அந்த சிங்கத்துக்கிட்டயே இத பத்தி கேட்டுச்சு
சிங்கராஜா சிங்கராஜா நீங்க என்ன போகச்சொல்லி சொன்னேங்களா இது உண்மையானு கேட்டுச்சு
அடடா நான் அப்படி சொல்லவே இல்லையே ,நான் சொன்னதா யார் உனக்கு சொன்னதுனு கோபமா கேட்டுச்சு அந்த சிங்கம்
இத கேட்ட அந்த குள்ளநரி தன்னோட மனைவிகிட்ட வந்து நீ பொய்தானே சொன்னனு கேட்டுச்சு
ஆமாம் எனக்கு எங்க இருக்க பிடிக்கல அதான் அப்படி சொன்னேன்னு சொல்லுச்சு
அதுக்கு அந்த நரி சிங்கத்துக்கிட்ட போயி நண்பரே நான் உங்கள தப்பா நினச்சு அப்படி கேட்டிருக்க கூடாது என்ன மன்னிச்சுடுங்கனு சொல்லுது
அதுக்கு அந்த சிங்கம் நீ மன்னிப்பு கேட்க தேவை இல்லை நரியே , உன்மனைவியே சொன்னாலும் எது உண்மைன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிடுற உன்னோட குணம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இனி நம்மள யாரும் பிரிக்க முடியாதுனு சொல்லுச்சு
அதுக்கப்புறமா அவுங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்ல நண்பர்களா வாழ்ந்து வந்தாங்க
குழந்தைகளா இந்த கதைல இருந்து நாம என்ன தெரிச்சுகிட்டம்னா நாம என்ன விஷயம் கேள்வி பட்டாலும் அதுல இருக்குற உண்மைய தெரிஞ்சுக்கணும் .இத தான் திருவள்ளுவர் ஒரு குறள்ல சொல்லிருக்காரு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு.