Paristamil Navigation Paristamil advert login

கெளதம் மேனன் அடுத்த படத்தில் நயன்தாரா?

கெளதம் மேனன் அடுத்த படத்தில் நயன்தாரா?

6 ஆனி 2024 வியாழன் 12:01 | பார்வைகள் : 819


கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் இல்லாத நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், இந்த படம் மலையாளத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மலையாளத்தில் உருவானாலும் இந்த படம் தமிழிலும் டப் செய்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க இருக்கிறார் என்பதும் அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் மம்மூட்டி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன், மெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய மூவரும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்