இங்கிலாந்து அரசியின் கைகளை பற்றிய பிரிஜித் மக்ரோன்... புதிய சர்ச்சை!
6 ஆனி 2024 வியாழன் 16:40 | பார்வைகள் : 4293
இங்கிலாந்து அரசியார் கமீலா அவர்களின் கரங்களை பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் பற்றிக்கொண்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அரசியின் கரங்களை எவரும் தொடக்கூடாது என்பது அந்நாட்டு அரச விதி. அதனை பிரிஜித் மக்ரோன் பின்பற்ற தவறியதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜூன் 6, வியாழக்கிழமை Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்போது, பிரெஞ்சு-பிரித்தானிய இராணுவ வீரர்களுக்காக அஞ்சலி சுடர் ஏற்றும் நிகழ்வினை பிரிஜித் மக்ரோன் மற்றும் கமீலா அரசியார் ஏற்றி வைத்தனர். அதன்போது பிரிஜித் மக்ரோன் அரசியாரின் கைகளை பிரிஜித் மக்ரோன் பற்ற முற்பட்டார்.
அரசியார் இரண்டு அடி பின்னால் செல்ல முற்பட்டார். ஆன போதும் அவரது கைகளை பற்றிக்கொண்டார்.
இச்சம்பவம் பிரித்தானிய ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.