பிரான்சில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
6 ஆனி 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 4447
பிரான்சில் மில்லியனுக்கும் அதிகமான சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'மில்லியனர்' சொத்து பெறுமதியுடன் பிரான்சில் தற்போது 827,000 குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பணக்காரர்களைக் கொண்ட உலக பட்டியலில் நான்காவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
குறிப்பாக கடந்த ஒருவருடத்தில் மட்டும் இந்த பணக்காரர்களின் எண்ணிக்கை 17% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 50,000 புதிய மில்லியனர் உருவாக்கப்பட்டுள்ளனர் எனவும், ஜேர்மனி (34,000) இத்தாலி (26,000) போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்த அசுர வளர்ச்சியை பிரான்ஸ் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CapGemini எனும் நிறுவனம் மேற்படி தரவுகளை நேற்று ஜூன் 5 ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டது.