Paristamil Navigation Paristamil advert login

20 நிமிடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

20 நிமிடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட  முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

25 ஆவணி 2023 வெள்ளி 09:57 | பார்வைகள் : 11662


அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சரணடைந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் 20 நிமிடங்கள் சிறையில் இருந்துள்ளார்.

சக குற்றவாளிகளையோ சாட்சிகளையோ மிரட்டுவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னரே டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்