Paristamil Navigation Paristamil advert login

ஆன்லைன் Bully-ஐ தடுக்க இன்ஸ்டாகிராமின் புதிய ஃபீச்சர்

ஆன்லைன் Bully-ஐ தடுக்க இன்ஸ்டாகிராமின் புதிய ஃபீச்சர்

7 ஆனி 2024 வெள்ளி 08:14 | பார்வைகள் : 4994


நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.

இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.

பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். 

நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்