Paristamil Navigation Paristamil advert login

 குற்ற வழக்கில் சிக்கிய  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன்

 குற்ற வழக்கில் சிக்கிய  அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன்

7 ஆனி 2024 வெள்ளி 08:51 | பார்வைகள் : 1207


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். 

மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.

இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.

அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்