கனடாவின் நீர் விநியோகத் தடை
7 ஆனி 2024 வெள்ளி 10:09 | பார்வைகள் : 6395
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரில் நீர் விநியோக குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீர் குழாய் கசிவு எங்கே ஏற்பட்டுள்ளது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இதனை கண்டுபிடிப்பதற்கு சில நாட்கள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே நகர மக்கள் குளித்தல், ஆடை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர மேயர் Jyoti Gondek தெரிவித்துள்ளார்.
மேலும் கொதித்து ஆரிய நீரை பருகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக தடையை சீர் செய்வதற்கு அதிகாரிகள் தொடர்ச்சியாக முயன்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக தடை காரணமாக கல்கரி நகர மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan