எவரெஸ்ட் இமயமலையில் 11 டன் குப்பை, 5 மனித உடல்கள் - நேபாள ராணுவம்
7 ஆனி 2024 வெள்ளி 11:29 | பார்வைகள் : 2620
எவரெஸ்ட் இமயமலையில் 11 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் ஐந்து மனித உடல்கள் மற்றும் ஒரு மண்டை ஓட்டையும் நேபாள ராணுவக்குழு அகற்றியதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேறுபவர்கள் வருகை தருகின்றனர்.
அவர்கள் ஷெர்பாக்களின் உதவியுடன் மலை ஏறுகிறார்கள். குளிர் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற பலர் உயிரிழந்தனர்.
அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டத்தில் சில நேரங்களில் மீட்க முடியாதவர்களின் உடல்கள் அப்படியே கிடந்தன.
மேலும், மலையேறுபவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை குவித்துள்ளனர்.
இதன் காரணமாக, 2019ல் மலையை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
நேபாள ராணுவம் இந்த திட்டத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. 12 வீரர்கள் கொண்ட குழு 18 பேர் கொண்ட மலையேற்ற ஆதரவுக் குழுவுடன் சென்றதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.