Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் : சென் நதியில் நீச்சல் பயிற்சி போட்டிகள் இரத்து..!

ஒலிம்பிக் : சென் நதியில் நீச்சல் பயிற்சி போட்டிகள் இரத்து..!

7 ஆனி 2024 வெள்ளி 14:04 | பார்வைகள் : 1399


சென் நதியில் தண்ணீர் மிக மோசமாக மாசடைந்துள்ளதால், நீச்சல் பயிற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சென் நதியில் அமைக்கப்பட உள்ள நீச்சல் தடாக பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. ஜூன் 10 ஆம் திகதி திங்கட்கிழமை இங்கு நீச்சல் பயிற்சிகள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், எதிர்பார்த்த அளவு தண்ணீர் சுத்திகரிக்கப்படவில்லை. அதில் மாடசைவு தொடர்ந்தும் இருப்பதால் நீச்சல் பயிற்சி போட்டிகள்  இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சென் நதியில் 50,000 கன மீற்றர் கழிவு  நீர் கலந்து, நிலமைகளை மேலும் மோசமடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்