Paristamil Navigation Paristamil advert login

விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸா?

விடாமுயற்சி  திரைப்படம்  தீபாவளிக்கு  ரிலீஸா?

7 ஆனி 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 3775


மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் கடந்த சில வாரங்களாக நடைபெறாமல் இருந்தது. அதனால், அஜித் அவரது அடுத்த படமான 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து அதில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜுன் 20ம் தேதி முதல் மீண்டும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள காட்சிகளை ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடிக்க உள்ளார்களாம். அதோடு படத்தை தீபாவளிக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

'விடாமுயற்சி' படம் பற்றி கடந்தச வில வாரங்களாகவே பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்போதைய தகவல் வெளியாகி உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்