பாடசாலை மாணவிகளுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
7 ஆனி 2024 வெள்ளி 14:43 | பார்வைகள் : 1802
பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக சுகாதார துவாய்களை (சானிட்டரி நாப்கின்) வழங்கும் வேலைத்திட்டம் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதன்படி, மாணவிகளுக்காக 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளது.
வவுச்சர்களை பாடசாலைகள் ஊடாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 06 மாதங்களுக்கு சுகாதார துவாய்களை வாங்குவதற்கான வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.