போதைப்பொருள் விற்பனைக்காக 'அழைப்பு மையம்' நடத்திய 13 பேர் கைது..!

7 ஆனி 2024 வெள்ளி 15:29 | பார்வைகள் : 9348
போதைபொருள் விற்பனை செய்வதற்காக அழைப்பு மையம் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாத இறுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்தார். பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் rue de la Réunion வீதியில் உள்ள வீடு ஒன்றை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 13 பேரினை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தொலைபேசியூடக அழைப்பு எடுத்து பதிவு செய்துகொண்டால், வீடு தேடி போதைப்பொருள் வரும். அதுபோன்ற அழைப்பு மையம் ஒன்றை நிறுவி வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். பல ஆயிரம் யூரோக்கள் மாத வருமானத்தை ஈட்டியுள்ளனர்.
அதேவேளை, அவர்கள் Saint-Ouen (Seine-Saint-Denis) நகரிலும் இதுபோன்ற அழைப்பு மையம் ஒன்றை நிறுவியிருந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, ஏழு மாதங்களின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025