ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள்..!
7 ஆனி 2024 வெள்ளி 20:00 | பார்வைகள் : 9574
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு ஈஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் அமைக்கப்பட்டன.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குரிய இறுதிக்கட்ட பணிகள் இடம்பெற்று வருகிறது. பரிசின் அடையாளமாக திகழும் ஈஃபிள் கோபுரத்தில் நேற்று இரவு ஐந்து வண்ணங்களாலான ஒலிம்பிக் வளையங்கள் இராட்சத கிரேன் மூலம் தூக்கி கோபுரத்தில் நிறுவப்பட்டது.
கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது தளத்துக்கு இடைப்பட்ட இடைவெளியில் இது அமைக்கப்பட்டது.
மிகவும் எடை குறைந்த Arcelor Mittal எனும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த வளையங்கள் 29 மீற்றர் அகலமும், 13 மீற்றர் உயரமும் கொண்டவையாகும்.
வளையங்களுக்கு உள்ளே 10,000 LED மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan