உக்ரேனுக்கு புதிய 'மிராஜ்' ரக போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ள பிரான்ஸ்..!
7 ஆனி 2024 வெள்ளி 21:00 | பார்வைகள் : 12368
உக்ரேனுக்கு Mirage 2000-5 எனும் அதி நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய உள்ளதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதன்போதே இதனைத் தெரிவித்தார். 'மிராஜ்-2000-5' எனும் இந்த நவீன போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகமாக பயணிக்கக்கூடியது எனவும் 30 மி.மீ துப்பாக்கியை தாக்கியது எனவும், அதிக எரிபொருள் தாங்கியைக் கொண்டது எனவும், ரேடார் கருவிகள் வசதியைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் இந்த விமானங்கள் உக்ரேனுக்கு விற்பனை செய்யப்படும் எனவும், உக்ரேனிய போர் விமான விமானிகளுக்கு ஆறுமாத கால பயிற்சியும் பிரான்சில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகளுக்கான பயிற்சிகளை வழங்கவேண்டும் என்பது Volodymyr Zelensky இன் கோரிக்கை எனவும் மக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan