பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு! மாணவர் ஒருவர் பலி

8 ஆனி 2024 சனி 03:25 | பார்வைகள் : 7145
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ள பனாமா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதாவது இதன் Rural வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் திடீரென நுழைந்தனர்.
அங்கிருந்த மாணவர்கள் குழுவின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
உடனே துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொல்லப்பட்ட மாணவர் அல்வரோ லியோன்ஸ் (27) என்பது தெரிய வந்தது.
அவர் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராக இருந்தார் என பல்கலைக்கழக ரெக்டர் தெரிவித்தார்.
மேலும் காயமடைந்த மற்றொரு மாணவர் அனெல் டெரரோஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025