Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் இளங்கலை பரீட்சை எழுதிய ஒன்பது வயது சிறுமி!

பிரான்சின் இளங்கலை பரீட்சை எழுதிய ஒன்பது வயது சிறுமி!

8 ஆனி 2024 சனி 06:48 | பார்வைகள் : 8957


BAC என அறியப்படும் இளங்கலை பட்டம் (Baccalauréat,) பரீட்சையை ஒன்பது வயது சிறுமி எழுதியுள்ளார். ஒன்பது வயதுடைய ஒருவர் இந்த பரீட்சை எழுதுவது பிரான்சில் இது முதல் தடவையாகும்.

நேற்று ஜூன் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரீட்சியையில்  Strasbourg நகரைச் சேர்ந்த குறித்த சிறுமி பங்கேற்றிருந்தார். 2024 ஆம் ஆண்டுக்கான இந்த இளங்கலை பட்டத்துக்காக 728,164 பேர் பரீட்சை எழுதியிருந்தனர். இதில் அதிக வயதுடையவராக 76 வயதுடைய ஒருவர் பரீட்சை எழுதியிருந்தார்.

பிரான்சில் இதற்கு முன்னதாக 12 மற்றும் 13 வயதுடைய சிறுவர் சிறுமியர் இளங்கலை பரீட்சை எழுதியிருந்த நிலையில், இவ்வருடம் முதன் முதலாக 9 வயதுடைய சிறுமி பரீட்சை எழுதியிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்