Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில்  புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு ஏற்படும் நிலை

பிரித்தானியாவில்  புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு ஏற்படும் நிலை

8 ஆனி 2024 சனி 10:02 | பார்வைகள் : 1790


பிரித்தானியாவில் அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 4 ஆம் திகதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்புகள் கூறிவரும் நிலையில், 

அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சியாவது புலம்பெயர்ந்தோருக்கு சாதகமாக இருக்குமா என்னும் கேள்வி பலர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா என்றால், அது சந்தேகமே என தோன்றுகிறது, லேபர் கட்சியின் சில நடவடிக்கைகளால்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் கைவிடப்படும் என்று லேபர் கட்சியின் தலைவரான Keir Starmer கூறியுள்ளது உண்மைதான். ஆனாலும், லேபர் கட்சியும், தங்கள் கட்சி புலம்பெயர்தலை எப்படி கட்டுப்படுத்தப்போகிறது என்பது குறித்த திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் பணியாளர் தட்டுப்பாடு உள்ள துறைகளில், பிரித்தானியர்களுக்கு பயிற்சியளித்து அந்த துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பதே லேபர் கட்சியின் திட்டம். அப்படி இந்த திட்டத்தை ஏற்க மறுக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு விசா ஸ்பான்சர் செய்வதற்கு தடை விதிக்கப்படும்!

ஆக, புலம்பெயர்ந்தோரை தடுப்பதற்கு பதிலாக, உள்நாட்டுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அந்த பணிகள் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்காமல் தடுக்க லேபர் கட்சி திட்டம் வைத்துள்ளது.

போட்டியிலிருக்கும் மற்றொரு கட்சியான Reform UK கட்சியும், வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க திட்டம் வைத்துள்ளது. ஆக மொத்தத்தில், பிரித்தானியாவில் ஆட்சி மாறினாலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்போர் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருப்பார்களா என்றால், அது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்