சிறுவர்களின் சிதைந்த உடல்கள் - காசாவில் ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்
8 ஆனி 2024 சனி 12:17 | பார்வைகள் : 2183
ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போது உயிர்பிழைத்தவர்கள் தாங்கள் கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் குறிப்பிட்ட பகுதியில் இரண்டாவது நாளாக தொடர்ந்தும் தாக்குதலை மேற்கொண்டுவரும் அதேவேளை ஐநா பாடசாலை மீதான தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள் சிதைந்துபோன நிலையில் சிறுவர்களின் உடல்களை பார்த்தோம் என தெரிவித்துள்னர்.
காசாவின் மத்தியில் உள்ள நுசெய்ரட்டின் அல்சார்டி பாடசாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் வேறு எவருடைய உடல்களையும் காணமுடியவில்லை என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது இன்னமும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ள மஹ்மூட் பாசல் காயமடைந்தவர்களிற்கு உரிய சிகிச்சை இன்மையே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளார்.
ஐநா பாடசாலையை முப்பது நாப்பது தீவிரவாதிகள் தளமாக பயன்படுத்தினர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்களையே இலக்குவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது .
பொதுமக்கள் உயிரிழந்தமை குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ள இஸ்ரேல் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
நுஸ்ரெய்டில் வசிக்கும் மசென் சுவ்டா என்ற 45 வயது ஆசிரியர் இஸ்ரேலின் தரைதாக்குதலில் இருந்து தப்புவதற்காக இரண்டு மாதங்களிற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறியதாகவும் எனினும் மீண்டும் தனது வீட்டிற்கு வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தான் மீண்டும் அங்கிருந்து வெளியேறவேண்டுமா என சிந்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை மீண்டும் மோசமடைகின்றது அன்றிரவு பாடசாலை தாக்கப்பட்டமையே தாங்கிக்கொள்ள முடியாத சம்பவம் குண்டுவீச்சு காரணமாக இரவுமுழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை தாக்கப்பட்டவேளை பெரும் சத்தம் கேட்டது இதனால் உறக்கத்திலிருந்த பிள்ளைகள் அச்சத்துடன் பெற்றோரின் அறைக்கு ஓடினார்கள் அதன் பின்னர் காயமடைந்தவர்களின் அலறல்கள் ஆரம்பமாகின .
மறுநாள் காலை 6000 பேர் தஞ்சமடைந்திருந்த அந்த பாடசாலைக்கு ஜூடா சென்றார்.
ஒருமாடியில் மூன்று வகுப்பறைகள் தாக்குதலிற்குள்ளாகியிருந்தன,மற்றுமொரு தளத்தில் மூன்று வகுப்பறைகள் அழிந்த நிலையில் காணப்பட்டன ,உயிர்பிழைத்தவர்கள் இடிபாடுகள் சிதறிக்கிடந்த முற்றத்தில் அதிர்ச்சியுடன் அலைந்து திரிந்தனர்.
அவர்களில் ஒருவர் ரஜாப் , தாக்குதல் நடைபெற்றவேளை அவர் விழித்திருந்தார் - தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அவ்வேளையே ஏவுகணை வகுப்பறையை தாக்கியது வகுப்பறை முற்றாக அழிக்கப்பட்டது.
சிலர் எங்களை இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கும் வரை எங்களிற்கு என்ன நடந்தது என்பதை எங்களால் உணரமுடியவில்லை ,அவர்கள் எங்களை தூக்கிக்கொண்டு கீழ் தளத்திற்கு சென்றார்கள் என்றார் அவர்.
எனது இளைய சகோதரன் கொல்லப்பட்டதை அறிந்தேன் அவனிற்கு பத்து வயது வகுப்பறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டான் அவனது கையையும் காலையும் காணமுடியவில்லை எனது சகோதரி காயமடைந்துள்ளார் எனது காலில் கையிலும் சிதறல்கள் தாக்கிய காயங்கள் உள்ளன என அவன் தெரிவித்தான்.
பாடசாலைக்கு எதிரே உள்ள பகுதியில் வசித்த ஹிசாம் சலாபி பாடசாலை தாக்கப்பட்டதை அறிந்ததும் காப்பாற்ற விரைந்தார்,கொல்லப்பட்ட நபர் ஒருவரினதும் குழந்தையின் சிதைந்த உடலையும் தான் கீழே தூக்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.