ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்..!
8 ஆனி 2024 சனி 14:57 | பார்வைகள் : 10330
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா மீது நட்புறவாக இருப்பதற்கும், ஐரோப்பாவை புரிந்துகொள்வதற்கும் நன்றிகள் என மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தோடு உக்ரேனுக்கு பல விதத்தில் உதவிகள் வழங்குவதற்கும் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.
'இது உக்ரேனோடு நின்றுவிடுவதில்லை. புட்டின் (இரஷ்ய ஜனாதிபதி) உக்ரேனைத் தாண்டி அதற்கு மேலும் செல்வார். ஐரோப்பா அச்சுறுத்தலுக்குள் உள்ளது. உக்ரேனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஆதரவாக இருப்பதற்கு நன்றி!' என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.


























Bons Plans
Annuaire
Scan