ஸ்வீடன் நாட்டிலும் பாலஸ்தீன ஆதரவாக இடம்பெறும் போராட்டங்கள்
9 ஆனி 2024 ஞாயிறு 02:36 | பார்வைகள் : 2268
காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சில நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஸ்வீடனிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயங்கிவரும் ராயல் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் அங்குள்ள கட்டடம் ஒன்றுக்குள் புகுந்து உட்புறமாகத் தாளிட்டுக்கொண்டனர்.
பொலொசார், போராட்டக்காரர்கள் மீது மோப்ப நாய்களை ஏவி விட்டு மிரட்டி, பல்கலைக்கழகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதே போல், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது 2,000 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஸ்வீடனிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.