உக்ரைனுக்கு நிதி வழங்குவதில் தாமதிக்கும் அமெரிக்கா

9 ஆனி 2024 ஞாயிறு 02:44 | பார்வைகள் : 4326
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர்தொடுத்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு இணையான தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனுக்கு ராணுவ உதவி நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் கட்சியின் எதிர்ப்பால் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பைடன் தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்குத் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதி அளித்த ஜோ பைடன், மின்சார கட்டமைப்பை சீரமைக்க 225 மில்லியன் அமெரிக்க டாலர் உள்பட ஆறு தொகுதிகளாக ராணுவ நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.