Paristamil Navigation Paristamil advert login

■ இன்று பிரான்சில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்.. சில தகவல்கள்..!

■ இன்று பிரான்சில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்.. சில தகவல்கள்..!

9 ஆனி 2024 ஞாயிறு 06:40 | பார்வைகள் : 3160


இன்று ஜூன் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுகிறது. இது தொடர்பான சில முக்கிய செய்திகளை இங்கு தொகுத்துள்ளோம்.

● 2019 ஆம் ஆண்டின் பின்னர் இந்த தேர்தல் இடம்பெறுகிறது. ஜூன் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் தேர்தல் இடம்பெறுகிறது.

● ஜூன் 6 ஆம் திகதி நெதர்லாந்திலும், 7 ஆம் திகதி செ குடியரசு (Czech Republic) மற்றும் அயர்லாந்திலும்,

8 ஆம் திகதி செ குடியரசு, இத்தாலி, லத்வியா, மல்டா, ஸ்லோவாகியா போன்ற நாடுகளிலும், 

இன்று 9 ஆம் திகதி, பிரான்ஸ், இத்தாலி, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோசியா, சைப்ரஸ், டென்மார்க், கிரீஸ், ஹங்கேரி, லிதுவேனியா,  லக்ஸம்பேர்க், போலந்த், போர்துக்கல், ரொமேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இடம்பெறுகிறது.

● கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 50.66% சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்தது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் இது 8% சதவீத அதிகரிப்பாகும்.

● 400 மில்லியன் ஐரோப்பிய மக்கள் இம்முறை வாக்குப்பதிவு செய்ய தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். 

● ஜேமனி மற்றும் பெல்ஜியத்தில் முதன்முறையாக 16 வயது நிரம்பியவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

● பிரான்சுக்கு மொத்தமாக உள்ள 81 ஆசனங்களில் Marine Le Pen இன் கட்சி இம்முறை அதிகூட ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்