ஆஸ்துமா உள்ளவர்களை கவலையடையச் செய்யும் செய்தி. Ventoline மற்றும் Seretide மருந்துகள் பற்றாக்குறை.
9 ஆனி 2024 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 9405
ஆஸ்துமா உள்ளவர்களையும், ஒவ்வாமை நோய்யுள்ளவர்களையும் அதிகம் பாதிக்கும் புல் மலர்களின் மகரந்த ஒவ்வாமை பிரான்சில் இந்த காலப்பகுதியில் மிகவும் அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது. அதிலும் குழந்தைகள், சிறுவர்களை இவை அதிகம் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலை காணப்படும் இவ்வேளையில் பூங்காக்கள், புல் வெளிகளுக்கு செல்லும் போது மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள் அவதானமாக இருங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் மேற்குறிப்பிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் Ventoline மற்றும் Seretide மருந்து வகைகள் பிரான்சில் பரவலாக கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது என பிரான்சின் மருந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் Fabrice Camaioni தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan