கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் கைது

9 ஆனி 2024 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 9420
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட உட்பட்ட முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் விசேட அதிரடிப்படை யினரால் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டபொருட்கள் கருவிகள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனமும் மீட்கப்பட்டு இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ்உத்தியோகத்தர் உட்பட கந்தளாய் மற்றும் ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1