Paristamil Navigation Paristamil advert login

வடகொரிய தலைவர் தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்கள்

வடகொரிய தலைவர் தொடர்பில் எச்சரிக்கும் நிபுணர்கள்

9 ஆனி 2024 ஞாயிறு 08:56 | பார்வைகள் : 1103


வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் மிக மோசமான ஆட்சி, அல்லது கடும் போக்கு நடவடிக்கைகளுக்கு பின்னால், அவரது சகோதரி Kim Yo-jong மூளையாக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

வடகொரிய மக்கள் வேறு எந்த நாட்டவருடனும் தொடர்பில் இருக்க கூடாது என தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  நூற்றுக்கணக்கான உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதும் Kim Yo-jong வகுத்த திட்டங்கள் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவில் தலைமை பொறுப்புக்கு அவரால் மிக சமீபத்தில் வர முடியாது.

கிம் ஜோங் உன் தமது மகளை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதால், அவரும் மிக இளவயது என்பதால் Kim Yo-jong மேலும் பலம் பெறுவார் என்றே கூறுகின்றனர்.

அத்துடன், Kim Yo-jong முதன்மை பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டால்,  பேரழிவுக்கு காரணமாக அமையும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.

Kim Yo-jong அளவுக்கு புத்திசாலி அல்ல கிம் ஜோங் உன் என குறிப்பிடும் நிபுணர்கள், தமது சகோதரரை இயக்குவதே Kim Yo-jong என்றே கூறுகின்றனர்.

சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் வசித்த 1996 முதல் 2001 வரையான காலகட்டத்தில் Kim Yo-jong மிகவும் படிப்பாளியாக காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது.

தமது சகோதரர் கிம் ஜோங் உன்னை விடவும் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் Kim Yo-jong.

தமது சகோதரரை விட உலக நாடுகளின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர் Kim Yo-jong என்றே கூறப்படுகிறது.

தற்போதும் உயர் பதவியில் இருக்கும் Kim Yo-jong தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதுடன், அவர்கள் எடுக்கும் முடிவு தான் வடகொரியாவை அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்த்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்