இலங்கை கிரிக்கட் துறையில் அடிப்படை மாற்றங்கள் மேற்கொள்ள நடவடிக்கை
9 ஆனி 2024 ஞாயிறு 09:10 | பார்வைகள் : 5233
இலங்கை கிரிக்கட் துறையில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் உட்கட்டுமானங்களில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
குறுகிய கால தீர்வுத் திட்டங்கள் மூலம் சவால்களுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நலன்களுக்காக சிலர் மேற்கொள்ளும் அனைத்து விதமான செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இதயத் துடிப்பு கிரிக்கட் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிரிக்கட் அனைவரையும் ஒன்றிணைக்கும் எனவும் விளையாட்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan