வீடற்றவர்களுக்கு வங்கி அட்டை... 21 வயது இளைஞனின் புதிய முயற்சி..!
9 ஆனி 2024 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 4047
வீடற்றவர்களுக்கு என வங்கி அட்டை ஒன்றை 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உருவாக்கியுள்ளார். பொதுமக்களிடம் இருந்து கூட்டுறவு நிதி மூலம் இந்த பணம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
’Solly’ என பெயரிடப்பட்ட இந்த வங்கி அட்டையானது முழுக்க முழுக்க வீடற்றவர்களுக்கும் அகதிகளுக்கும் மட்டுமே பயன்படும். இதனை பதிவு செய்து பெற்றுக்கொண்டால், அவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், மருந்தகங்களில் உள்ள பொருட்களையும் மட்டுமே வாங்க முடியும். அதனை மதுபானம் வாங்கவோ, யாருக்கும் பரிசுகள் வழங்கவோ பயன்படுத்த முடியாது. அதேபோல் நாள் ஒன்றில் எவ்வளவு செலவிட முடியும் என்பதற்கும் கட்டுப்பாடு உள்ளது.
இதற்கான நிதியை மக்களிடம் இருந்து அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்காக முதல் ஓரிரு நாட்களிலேயே 21,000 யூரோக்கள் நிதி சேர்ந்துள்ளன.
Lille நகரைச் சேர்ந்த 21 வயதுடைய Tom எனும் இளைஞனே இந்த முயற்சியை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். முதல் கட்டமாக Lille மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமே இது விநியோகிக்கப்பட உள்ளது.