பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்..!
9 ஆனி 2024 ஞாயிறு 15:34 | பார்வைகள் : 9594
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நேற்று ஜூன் 8, சனிக்கிழமை மாலை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பிரான்ஸ்-பாலஸ்தீன குடியுரிமை கொண்ட தன்னார்வ மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்தவரான Rima Hassan எனும் பெண் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். பரிசில் நேற்று மாலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 6,000 பேர் அதில் பங்கேற்றிருந்தனர்.
பாலஸ்தீனத்தின் கொடியினை பிடித்துக்கொண்டு, இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்களை கோஷமிட்டுக்கொண்டும், பதாகைகளை தாங்கிக்கொண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறை எதுவும் பதிவாகவில்லை.

























Bons Plans
Annuaire
Scan