அல் நஸர் அணியின் முதல் வெற்றி...

26 ஆவணி 2023 சனி 08:24 | பார்வைகள் : 6188
சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அல் ஃப்டெஹ் அணியை வீழ்த்தியது.
Prince Abdullah Bin Jalawi மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஃபடெஹ் மோதின.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் சடியோ மனே அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 38வது நிமிடத்தில் ரொனால்டோ தனது கோல் கணக்கை தொடங்கினார்.
தலையால் முட்டி மிரட்டலாக கோல் அடித்த ரொனால்டோ, 55வது நிமிடத்தில் அசால்ட்டாக இரண்டாவது கோல் அடித்தார்.
அல் நஸரின் வேகத்தை அல் ஃபடெஹ் அணியினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
81வது நிமிடத்தில் சடியோ மனே தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார்.