Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நத்திங் 3 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான கசிந்த தகவல்...!

நத்திங் 3 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான கசிந்த தகவல்...!

10 ஆனி 2024 திங்கள் 08:06 | பார்வைகள் : 10546


நத்திங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் அண்மையில் அளித்த தகவலின்படி, நத்திங் போன் 3 இந்த வருடம் வெளிவராது என்ற செய்தி உற்சாகக் குறைவை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்வரும் நத்திங் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

ஆர்வமூட்டும் யூகங்கள் மற்றும் தகவல் கசிவுகள் இருப்பதால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நத்திங் போன் 3 எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம். (இவை உறுதிப்படுத்தப்படவில்லை)

விலை
இந்தியாவில் ₹40,000 - ₹45,000 என்ற தொடக்க விலை வரம்பை இந்த ஃபோன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போட்டி நிறைந்த மத்திய-தரம் முதல் உயர்-தரம் பிரிவில் இடம்பெறும்.

வடிவமைப்பு
முந்தைய மாடல்களைப் போலவே, Glyph இடைமுகத்துடன் கூடிய வடிவமைப்பை 3ம் பதிப்பும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு திகதி
முன்னர் குறிப்பிட்டது போல், 2025 ம் ஆண்டில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்சங்கள்
 புரொசஸர்: Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட்

திரை: 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் மேம்படுத்தப்பட்ட LTPO AMOLED திரை

Camera: 64MP முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு

பற்றரி: வேகமான சார்ஜிங் திறன் கொண்ட 5000 mAh பற்றரி

மென்பொருள்: Android 15 (சாத்தியம்) அடிப்படையிலான Nothing OS 3.x

முடிவுரை
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், முன்னணி ஃபோன் பிரிவில் போட்டியில் இறங்க தயாராக இருக்கும் கருவியாக நத்திங் போன் 3 உருவாகிறது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்