உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள்.
10 ஆனி 2024 திங்கள் 08:12 | பார்வைகள் : 5227
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்றைய தினம் பிரான்சில் நடைபெற்றுள்ளது அதன்படி எந்தெந்த கட்சிகள் இவ்வாறான முடிவுகளை எட்டியுள்ளன என்பதனை உள்துறை அமைச்சகம் இன்று இறுதியாக அறிவித்துள்ளது.
Rassemblement national 31.36% சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும் Renaissance 14.6 % சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திலும், PS-Place Publique 13.84 % சதவீத வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திலும், France insoumise 9.89% சதவீத வாக்குகளை பெற்று நான்காம் இடத்திலும், Républicains 7.24% சதவீத வாக்குகளை பெற்று 5ஆம் இடத்திலும் இருக்கிறது.
தீவிர வரதுசாரி கட்சியான Rassemblement national 31.36% வாக்குகளைப் பெற்று அதிக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளத்தால் இந்த தேர்தலில் மக்களுடைய மனோநிலை மாறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தீவிர வரதுசாரி கட்சியான Rassemblement national 31.36% வாக்குகளை பெற்றுள நிலையில் ஆளும் கட்சி அதைவிட பாதி சதவீத வாக்குக்களை ( Renaissance 14.6) பெறாத நிலையிலேயே பிரான்ஸ்னுடைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தை ஒன்று கூட்ட நடைபெற்ற தேர்தல் பிரான்ஸ் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இம்மாதம் 30ம் திகதி முதல் கட்ட வாக்களிப்பையும், எதிர்வரும் யூலை 7ம் திகதி இரண்டாம் கட்ட வாக்கெடுப்பையும் சந்திக்க உள்ளது.