Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் பதின்ம வயதினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் பதின்ம வயதினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

10 ஆனி 2024 திங்கள் 08:49 | பார்வைகள் : 6014


கனடாவில் பதின்ம வயதினருக்கு உண்ணுதல் கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் போது உண்ணுதல் கோளாறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையான மருத்துவ பரிசோதனைகளைப் போன்றே ஏனைய மருத்துவ பரிசோதனைகளின் போதும் உண்ணுதல் கோளாறு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உண்ணுதல் கோளாறு குறித்து முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியமானது என பேராசிரியர் டொக்டர் டெபேரா காட்ஸ்மன் தெரிவித்துள்ளார். 

உண்ணுதல் கோளாறு காணப்படுவர்களின் உடல் எடையில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்