ரஷ்யாவின் அதி நவீன போர் விமானம் மீது ட்ரோன் தாக்குதல்
10 ஆனி 2024 திங்கள் 09:19 | பார்வைகள் : 8205
ரஷ்யாவில் அதி நவீன எஸ்யு-57 ரக போர் விமானத்தை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலினால் அந்த விமானம் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தெற்கு ரஷ்யாவில் உக்ரைன் எல்லையை ஒட்டிய ஆஸ்திராகான் மாகாணத்தில் அக்துபின்ஸ்க் விமான தளம் அமைந்துள்ளது.
உக்ரைனின் எல்லையில் இருந்து 589 கிமீ தொலைவில் உள்ளதால் ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


























Bons Plans
Annuaire
Scan