Paristamil Navigation Paristamil advert login

வெந்தய குழம்பு

 வெந்தய குழம்பு

10 ஆனி 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 228


உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை நான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த குழம்பு 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் வெந்தய குழம்பு எப்படி செய்வது  என்பதை தெரிந்து கொள்ளலாம்

வெந்தயக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 1ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 20 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
சீராக தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 2 
தக்காளி - 2 
எண்ணெய் - தேவையான அளவு
புளி கரைசல்
கொத்தமல்லி இலைக - சிறிதளவு

செய்முறை:
வெந்தயக் குழம்பு செய்ய முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு, எடுத்து வைத்த வெந்தயம், கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர், ஊறித்து வைத்த  சின்ன வெங்காயத்தை இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். சிறிது நேரம் கழித்து, பூண்டையும் இதனுடன் சேர்த்து வதக்கவும்.  

சின்ன வெங்காயத்தை, பூண்டு இரண்டும் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை இவற்றுடன் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். பின் பொடியாக நறுக்கிய தக்காளியையும்  இதனுடன் சேர்த்து வதக்குங்கள். 
தக்காளி நன்கு மசிந்த பிறகு, அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இப்பொழுது, அடுப்பில் தீயை குறைத்து வைத்து கொள்ளுங்கள்.

இப்போது கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். பின் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து, கிளறிவிடுங்கள். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி கொதிக்க வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி கீழே இறக்கி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வெந்தயக் குழம்பு ரெடி!!! சூடான சாதத்தில் இதை ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்..

வர்த்தக‌ விளம்பரங்கள்