தென்கொரியாவை எச்சரிக்கும் வடகொரியா...! மீண்டும் பலூன்களால் அச்சம்
10 ஆனி 2024 திங்கள் 09:30 | பார்வைகள் : 8073
வடகொரியா தலைவருக்கு எதிராக 2 லட்சம் துண்டு பிரசுரங்களை தென்கொரியா பலூன்களில் பறக்க விட்டதற்கு பதிலடியாக மீண்டும் பலூன்களை பறக்க விட உள்ளதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கொரிய எல்லைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவுக்குள் நூற்றுக்கணக்கான இராட்சத பலூன்களை வடகொரியா பறக்க விட்டதோடு, அந்த பலூன்களில் சிகரெட் துண்டுகள், பேட்டரி துண்டுகள் போன்ற குப்பைகள் இருந்துள்ளன.
இதனால் ஆத்திரம் அடைந்த தென்கொரியா 2018 இல் மேற்கொண்ட வடகொரியா உடனான இராணுவ ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதனை சமாளிக்க தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகின்றமை குறிப்பிடப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan