மேகத்தின் முத்தம்
![மேகத்தின் முத்தம்](ptmin/uploads/news/Poem_renu_beautiful-cloud.jpg)
10 ஆனி 2024 திங்கள் 10:09 | பார்வைகள் : 415
வானத்தில் மேகங்கள்
காதல் கொண்டு
ஒன்றோடு ஒன்று
ஓடிப்பிடித்து விளையாடி
அருகினில் நெருங்கி
முத்தங்களை
பரிமாறிக் கொண்டது ...!!
முத்தத்தின் சத்தம்
இடியோசையுடன்
முத்த மழையாக பிறந்து
பூமியில் தவழ்ந்து ஓடியது ...!!