மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?
10 ஆனி 2024 திங்கள் 17:18 | பார்வைகள் : 1682
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மத்தியில் ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதையடுத்து, மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில், மோடி 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 71 மத்திய மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனிடையே, பா.ஜ.க. அரசில் பதவியேற்ற மத்திய மந்திரிகள் யாருக்கு எந்த இலாகா ஒதுக்கப்படும் என்பதில் பரபரப்பு நீடித்து வந்தது. இந்நிலையில், அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருசில மந்திரிகளுக்கு கடந்த முறை பணியாற்றிய அதே இலாகா வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு இலாக்கா மாற்றப்பட்டு புதிய இலாக்கா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்
* உள்துறை, கூட்டுறவுத்துறை - அமித்ஷா
* சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை - நிதின் கட்காரி
* சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை - ஜேபி நட்டா
* நிதித்துறை - நிர்மலா சீதாராமன்
* வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்
* வேளாண், விவசாய நலத்துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை - சிவராஜ் சிங் சவுகான்
* வீட்டுவசதி, நகரப்புற வளர்ச்சித்துறை மற்றும் மின்துறை - மனோகர் லால் கட்டார்
* கனரக தொழில்துறை, இரும்பு எக்குத்துறை - ஹெச்.டி.குமாரசாமி
* வர்த்தகம் மற்றும் தொழில்துறை - பியூஷ் கோயல்
* கல்வித்துறை - தர்மேந்திர பிரதான்
* சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஜிதன்ராம் மஞ்ச்கி
* பஞ்சாயத்து ராஜ்ய துறை, மீன்வளத்துறை, விலங்குகள் நலத்துறை, பால்வளத்துறை - ராஜீவ் ராஜன் சிங்
* துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை - சர்பானந்த சோனாவால்
* விமானப்போக்குவரத்துத்துறை - கின்ஜரபு ராம் மோகன்
* சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை - வீரேந்திரகுமார்
* பழங்குடியின நலத்துறை - ஜுவல் ஒரம்
* ரெயில்வேத்துறை, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை - அஸ்வினி வைஷ்னவ்
* ஜவுளித்துறை - கிரிராஜ் சிங்
* கலாசாரத்துறை, சுற்றுலாத்துறை - கஜேந்திரசிங்
* பெண்கள், குழந்தைகள் நலத்துறை - அன்னபூர்ன தேவி
* நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, சிறுபான்மையினர் நலத்துறை - கிரண் ரிஜிஜூ
* தொழிலாளர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - மன்சூக் மாண்டவியா
* பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை - ஹர்தீப் சிங் பூரி
* நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை - கிஷன் ரெட்டி