ஜனாதிபதி மக்ரோன் மீண்டும் உரையாற்றுகிறார்...!
11 ஆனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10990
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மீண்டும் நாட்டு மக்களுக்கான உரையாற்ற உள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் மீண்டும் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகிறார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பொது தேர்தல் ஒன்றினை அறிவித்திருந்தார். ஒலிம்பிக் போட்டிகளின் பரபரப்புக்கு இடையே இந்த தேர்தல் இடம்பெறும் எனவும், இரு கட்ட வாக்களிப்பு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி இடம்பெறும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தல் தொடர்பில் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், இன்று ஜூன் 11 ஆம் திகதி நண்பகல் ஜனாதிபதி மக்ரோன் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
நடைபெற்று முடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில், Rassemblement national கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதை அடுத்தே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan