யூரோ கிண்ணம் - இங்கிலாந்து ரசிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
11 ஆனி 2024 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 1345
யூரோ கிண்ணம் 2024ல் செர்பியா அணியுடன் இங்கிலாந்து முதல் போட்டியில் மோதவுள்ளது.
இந் நிலையில், ரசிகர்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் Gelsenkirchen பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் ஜூன் 16 ஆம் திகதி ஞாயிறன்று இங்கிலாந்து அணி செர்பியாவுக்கு எதிராக களமிறங்குகிறது.
ஆனால் இந்த ஆட்டம் செர்பியாவின் மிக மோசமான கால்பந்து ரசிகர்களால் மிக ஆபத்தானதாக மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியில் சுமார் 500,000 செர்பிய மக்கள் குடியிருக்கின்றனர்.
இதில் கால்பந்து கொண்டாட்டங்களில் பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் சில தீவிர ரசிகர்கள் Gelsenkirchen புறப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். 2016ல் இங்கிலாந்து ரசிகர்களும் ரஷ்ய கால்பந்து ரசிகர்களும் பெரும் கலவரத்தையே உருவாக்கினர்.
செர்பியாவின் தீவிர கால்பந்து ரசிகர்களில் பெரும்பாலானோர் தீவிர வலதுசாரி ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் என்றே கூறப்படுகிறது. இவர்கள் எப்போதும் ஜேர்மன் மக்களுடனும் இங்கிலாந்து ரசிகர்களுடனும் சண்டையிட துணிந்தவர்கள். இந்த நிலையிலேயே இங்கிலாந்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.