சீனாவில் அமெரிக்கர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
11 ஆனி 2024 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 7417
சீனாவில் நான்கு அமெரிக்கர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இந்நிலையில் 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனாவின் பல்கலைகழகமொன்றில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் ஜிலின் மாகாணத்தின் பூங்காவிற்கு சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அயோவா கார்னல் கல்லூரியில் பணியாற்றிய அமெரிக்கர்களே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் தனது சகோதரரும் ஒருவர் என அயோவாவின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அடம்ஜப்னெர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகள் ஆலயமொன்றிற்கு சென்றவேளை நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan