"விடுமுறைக்கு சென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வாக்களிப்பது?" இணையத்தில் தேடல்.
11 ஆனி 2024 செவ்வாய் 12:15 | பார்வைகள் : 3575
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஜூலை 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றும், ஜூலை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காலகட்டம் கோடை விடுமுறை காலம் என்பதால் வாக்காளர்கள் எப்படி விடுமுறையில் நின்றபடியே வாக்களிப்பது என இணைய தளங்களில் தேடி வருகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டவர்களில் பெரும்பாலானோர் தமது விடுமுறையை ஜூன் மாதத்தின் இறுதி வாரத்திலும் ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் கழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கும் நிலையில்தான் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தான் இல்லாத பொழுதில் இவ்வாறு தன் இடத்திற்கு மற்றும் ஒருவர் வாக்களிக்கலாம் என்கின்ற நிலை பிரான்ஸ் நாட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே குறித்த வாக்காளர் இல்லாமல் அவருடைய இடத்துக்கு மற்றும் ஒருவர் வாக்களிக்கும் நடைமுறையான 'Vote par procuration' முறையினை அதிகமான வாக்காளர்கள் விரும்புகின்றனர். 'Vote par procuration' பெறுவதற்கு முதலில் இணையத்தில் வசதிகள் உண்டு, அல்லது நேரடியாக Préfecture, Gendarmerie, Tribunal d'instance மற்றும் mairie போன்ற அரச கரும அலுவலகங்களில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.