'ராயன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது!
11 ஆனி 2024 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 8890
சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வலம்வருபவர் நடிகர் தனுஷ். அவரது 50 ஆவது திரைப்படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ராயன்' திரைப்படத்திற்கு A.R. ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவான 'ராயன்' திரைப்படப் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படம் குறித்த மிக முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 'ராயன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை அறிவித்துள்ளது. குறித்த அப்டேட்டால் தனுஷ் இரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan