Paristamil Navigation Paristamil advert login

பிரேதப்பெட்டிகளை அச்சுப்பதித்த மூவருக்கு குற்றப்பணம்..!

பிரேதப்பெட்டிகளை அச்சுப்பதித்த மூவருக்கு குற்றப்பணம்..!

11 ஆனி 2024 செவ்வாய் 14:31 | பார்வைகள் : 10349


பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில், பல்வேறு இடங்களில் பிரேதப்பெட்டிகளை அச்சுப்பதித்த மூவருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

கடந்தவாரம், 7 ஆம் வட்டாரத்தின் பல இடங்களில் சிவப்பு நிறத்தில் பிரேத பெட்டிகள் அச்சடிக்கப்பட்டு, 'உக்ரேனில் கொல்லப்பட்ட பிரெஞ்சு இராணுவ வீரர்களின் பிரேதப்பெட்டி!' என வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருந்த 2001, 2004, 2006 ஆம் ஆண்டுகளில் பிறந்த மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் €15,000 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டு பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்