Paristamil Navigation Paristamil advert login

Porte d'Aubervilliers : எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்..!!

Porte d'Aubervilliers : எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்..!!

11 ஆனி 2024 செவ்வாய் 16:44 | பார்வைகள் : 9012


Porte d'Aubervilliers அருகே சுற்றுவட்ட வீதியில் (périphérique) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் அங்குள்ள TotalEnergies எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவரை நபர் ஒருவர் வழிமறித்துள்ளார். அவரிடம் கூரான கத்தி ஒன்று இருந்துள்ளது. அவர் குறித்த வாடிக்கையாளரை மிரட்டி அவரிடம் இருந்து பணம் கோரியுள்ளார்.

அதற்கிடையில், காவல்துறையினர் அழைக்கப்பட, Pantin  நகரில் இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், அசம்பாவிதங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்