Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் தந்தையர் தினத்திற்காக  சலுகை அறிவிப்பு!

கனடாவில் தந்தையர் தினத்திற்காக  சலுகை அறிவிப்பு!

12 ஆனி 2024 புதன் 06:14 | பார்வைகள் : 3971


கனடாவின் ஒன்றாரியோ மாகாண எதிர்வரும் தந்தையர் தினத்தன்று அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மாகாணத்தின் நதிகள் மற்றும் குளங்களில் இலவசமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

தந்தையர் தின வார இறுதி நாட்களில் இந்த சலுகையை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகிய நதிக்கரைகளில் மீன் பிடித்து கொண்டாடி மகிழ்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் இயற்கை வள அமைச்சர் க்ரைடோன் ஸ்மித் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

மீன் பிடியில் ஈடுபடுவது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கே மகிழ்ச்சியானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் பல்வேறு மீன் வகைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபடும்போது மீன்பிடித்தல் தொடர்பான விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றாயோவில் வளமையாக 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு உரிமம் ஒன்றை வைத்திருக்க வேண்டியது அவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.


தந்தையர் தினத்தை முன்னிட்டு இலவசமாக நீர் நிலைகளில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்