பிரான்சில் பொது தேர்தல்.. ஒன்றிணைந்த இடதுசாரிகள்..!

12 ஆனி 2024 புதன் 07:17 | பார்வைகள் : 10162
பிரான்சில் அவசர பொது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில், இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன.
இந்த அரசியல் கூட்டணிக்கு "Front populaire" என பெயரிடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national அதிகூடிய ஆசனங்களை பெற்றது. அதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் Rassemblement national கட்சி அதிகூடிய வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன.
EELV, PS, LFI , PCF மற்றும் Place publique போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று ஜூன் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்றை மேற்கொண்டன.
முன்னதாக சென்ற பொது தேர்தலிலும் இடதுசாரிகள் ‘Nupes' எனும் பெயரில் (Nouvelle Union populaire écologique et sociale) கூட்டணி அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் மக்ரோனின் கட்சி 14.5% சதவீத வாக்குகளைப் பெற, மரீன் - லு-பென்னின் Rassemblement national கட்சி 31.5% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1