அழகிய கடல்கன்னி
26 ஆவணி 2023 சனி 09:56 | பார்வைகள் : 2874
அழகிய கடல்கன்னி:- ரொம்ப காலத்துக்கு முன்னாடி , கடலுக்கு அடியில ஒரு ராஜாங்கம் இருந்துச்சு,அங்க நிறய கடல் கன்னிகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க
அந்த ராஜாங்கத்த ஒரு கடல் கன்னி அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு
அவருக்கு ஆறு பொண்ணுங்க இருந்தாங்க ,அவுங்க எல்லாரும் ரொம்ப அழகா இருந்தாங்க.
இருந்தாலும் கடைசி பெண் கடல் கன்னி எல்லாரையும் விட ரொம்ப அழகா இருந்துச்சு.
அவ பெரியவளா ஆனதுக்கு பிறகு ஒருநாள் ,அவுங்க பாட்டி அவள கூப்பிட்டு , இந்த கடல் மட்டும் உலகம் இல்லை ,கடலுக்கு வெளியில இன்னொரு உலகம் இருக்கு,அதுல மனிதர்கள் வாழ்த்துகிட்டு இருக்காங்கனு சொன்னாங்க,
இப்ப நீ பெரியவளாகிட்டதால உனக்கு வெளியில போய் பாக்க அனுமதி கொடுக்குறேன் வெளி உலகத்தை போய் பாத்துட்டு வானு சொன்னாங்க
உடனே கடல் மட்டத்துக்கு மேல வந்த அந்த கடல் கன்னி தென்றல் காற்று பட்டதும் சொக்கி போய் ஒரு பாறை மேல உக்காந்து இயற்கையை ரசிக்க ஆரம்பிச்சா
அப்பத்தான் அந்த பக்கமா ஒரு படகு போச்சு ,அந்த படகு அந்த நாட்டு அரசரோட படகு ,அதுல இளவரசரோட பிறந்தநாள் கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க
தூரத்துல இருந்து இளவரசர பார்த்த கடல் கன்னிக்கு அவன ரொம்ப பிடிச்சி போச்சு ,அவனோட பேசணும் நட்ப்பு வச்சிக்கிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டா
அப்ப திடீர்னு கடல்ல புயல் அடிக்க ஆரம்பிச்சுச்சு ,உடனே அந்த படகு முழுகிடுச்சு ,அதுல இருந்த எல்லாரும் நீச்சல் அடிக்க ஆரம்பிச்சாங்க.
சின்ன பையனான இளவரசன் நீச்சல் அடிக்க முடியாம தவிச்சான் ,அப்ப கடல்ல குதிச்சி கடல் கன்னி அவன காப்பாத்தி கரைல படுக்க வச்சா
அதுக்கு அப்புறமா என்ன செய்யணும்னு தெரியாம கடல்ல குதிச்சி கடல் கன்னி நல்ல குடிநீர் எடுக்க போனா
அவ திரும்பி வந்து பாக்குறப்ப ,இன்னொரு படகு அங்க நின்னுகிட்டு இருந்துச்சு ,அதுல இருந்து பக்கத்து நாட்டு இளவரசி இளவரசனை காப்பாத்திக்கிட்டு இருந்தாங்க
கண்ணுமுழிச்சி பார்த்த இளவரசர் தன்னை காப்பாத்துனது இந்த பக்கத்து நாட்டு இளவரசினு நினைச்சுட்டான்,அவளுக்கு நன்றி சொல்லிட்டு அவளோட படகுல ஏறி அரண்மனைக்கு போய்ட்டான் அந்த இளவரசன்
மீண்டும் அந்த இளவரசனை பார்க்கணும்னு நினச்ச கடல்கன்னு ,கடல்ல இருக்குற ஒரு சூனிய கரிக்கிட்ட உதவி கேட்டா
நான் உனக்கு நடக்க கால்களும்,வெளியில போக அனுமதியும் தாரேன் ஆனா இனிமே உன்னால பேச முடியாது,உனக்கு ஒருநாள் தான் அனுமதி அதுக்கு அப்புறமா இந்த கடல்ல கரைஞ்சு கடல் நுரையா மாறிடுவ உனக்கு சம்மதமானு கேட்டா கிழவி
அதுக்கு அந்த கடல் கன்னி சரினு சொன்னா ,உடனே இந்த உதவிக்கு கைமாறா உன்னோட குரலை நான் எடுத்துக்குவேன்னு சொல்லுச்சு அந்த கிழவி ,அதுக்கும் அந்த கடல் கன்னி சரினு சொல்லுச்சு,உடனே மந்திரம் சொன்னா அந்த கிழவி ,உடனே அவளோட வால் மறைஞ்சு கால்கள் வந்துச்சு கடல்கன்னிக்கு
இளவரசனை பார்க்க அரண்மனைக்கு போனா அந்த கடற்கன்னி ,ஆனா அங்க இருந்த காவல் காரங்க அவள உள்ள விடல ,அப்பத்தான் அரண்மனைல இருந்து பாட்டு சத்தம் கேட்டுச்சு ,உடனே நடனம் ஆட ஆரம்பிச்சா கடல் கன்னி உடனே அவளை உள்ள கூட்டிட்டு போனாங்க காவலர்கள் ,
அங்க போனதுக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது இளவரசருக்கு அந்த பக்கத்து நாட்டு இளவரசிக்கும் இன்னைக்கு திருமணம்னு,உள்ள வந்ததும் கடல் கன்னியா அடையாளம் கண்டு பிடிச்சா அந்த இளவரசி ,நீதானா இவரை கடல்ல இருந்து காப்பாத்துனனு கேட்டா
தன்னோட குரலை சூனிய கார கிழவிக்கு கொடுத்ததால பேச முடியல அவளால , ஆமான்னு தலைய மட்டும் ஆடுனா ,உடனே அவளுக்கு நன்றி சொன்னா அந்த இளவரசி ,நீ திரும்ப கடலுக்கு போனதும் நான் அங்க வந்து இவரை சந்திச்சேன் அதனாலதான் இந்த திருமணம் நடக்குதுன்னு சொன்னா
அப்ப அங்க வந்த இளவரசருக்கும் உண்மை தெரிய வந்துச்சு ,உடனே அவனும் நன்றி சொல்லிட்டு ,திருமண விருந்து கடல்ல படகுல நடக்க போகுதுனு சொல்லி அவளையும் கூட்டிட்டு போனான்.
என்னதான் தான் இளவரசரை காப்பாத்துனாலும் இங்க இருக்குறவங்க எல்லாரும் நல்லவங்கனு புரிச்சிகிட்டா ,கடல் கன்னி
அப்பத்தான் கடல்ல இருந்து சத்தம் வந்துச்சு ,யாருனு பார்த்தா கடல் கன்னி ,அங்க அவளோட சகோதரிகள் நீந்திக்கிட்டு இருந்தாங்க,ஆனா அவுங்களோட அழகான கூந்தல் இல்லாம இருந்துச்சு
நாங்க எங்களோட கூந்தலை அந்த சூனியக்கார கெழவிகிட்ட கொடுத்து ,இந்த மந்திர கத்திய வாங்கிட்டு வந்திருக்கோம் ,
இத்தவச்சு ,அந்த இளவரசன குத்து நீ பழையபடி கடல் கன்னியா மாறிடலாம்னு சொன்னாங்க
அந்த கத்திய வாங்குன கடற்கன்னி இளவரசனும் இளவரசியும் நல்லவங்க அவுங்க ரொம்ப நாள் வாழணும்னு நினச்சு ,கத்திய கடல்ல தூக்கி போட்டுட்டா
அதுல இருந்து மாய கடல் கன்னியா கடலில விழறவங்கல காப்பாத்துற கடவுளா மாறிட்டா அந்த கடல் கன்னி