வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்…
12 ஆனி 2024 புதன் 08:22 | பார்வைகள் : 6842
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தை முடித்துவிட்டார். அதேசமயம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி வெங்கட் பிரபு தற்போது கோட் படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்த பின்னர் சிவகார்த்திகேயனை இயக்குவார் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பும் கோட் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வெளியாகும் என்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படமானது அர்ஜுனின் முதல்வன் படத்தை போல் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan